Tuesday, December 13, 2011

nam kuzhandhai

என் எழுதுகோலும்
உன் காகிதமும்
கொடுத்த முத்தத்தில் பிறந்தது
நம் கவிதை குழந்தை !!!

Tuesday, March 8, 2011

tharkolai

என் தோட்டத்து  பூக்கள் எல்லாம்
தற்கொலை செய்து கொள்ள துடிக்கின்றன !
உன் கூந்தலில்  வருவதற்காக !!

mudhal kavithai

நான் எழுதிய காதல் கடிதம்
மிக அழகாக தெரிந்தது
அவள் கிழித்து போட்ட போது !!

Tuesday, February 15, 2011

un varugai

காற்றாக வந்தாய் !
மூச்சாக நுழைந்தாய் !!
காதலாக கலந்தாய் !!!
கவிதைகளை தந்தாய் !!!!

moondram vidhi

நியூட்டனின் மூன்றாம் விதி பொய்த்தது!
அவள் கண்கள் எனை ஈர்க்கும் விசைக்கு
எதிர்விசை ஏதும் இல்லையே !!!! 



Tuesday, February 1, 2011

aasai

இலையுதிர் காலத்தில்
உன் இல்ல தோட்டத்தில்
சருகாய் பிறக்க ஆசை கொண்டேன் !
நீ நடந்து வருகையில்
உன் பாதம் படுகையில்
சொர்க்கம் போல் உணரக்கண்டேன் !!